ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால் மாற்றுப்பால் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள பால் எடை குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மத்திய பால் பணையிலிருந்து உதவி பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பாளர் தசரதனிடம் நேற்று நேரில் விசாரணை செய்தனர். அப்போது ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்ததாகவும், அதற்கு உடனடியாக மாற்றுப் பால் பாக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
நுகர்வோர்களின் நலன் பேணும் வகையில் தரம் மற்றும் அளவுகளில் எவ்வித வேறுபாடும் இல்லாமல் பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக பால் பாக்கெட் மாற்றி வழங்கப்படும் எனவும், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அது மட்டுமில்லாமல் நுகர்வோருக்கு ஏதேனும் குறைகள் இருக்கும் பட்சத்தில் 24 மணிநேர சேவை கட்டணமில்லா எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Post Views:
0