வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய செய்தி….. புதிய வசதி அறிமுகம்…..!!!!!


இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது whatsapp உள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும் புதிய whatsapp குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் பிரைவேசி கட்டுப்பாட்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்சப்களில் போலி செய்தியை பரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் குரூப் அட்மின்களுக்கு சிறந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதாவது போலீஸ் செய்தி, அவதூறாக ஆபாச பேச்சு அல்லது ஆபாச வீடியோ போன்றவற்றை தவிர்க்கும் நோக்கில் குரூப் அட்மின்களுக்கு டெலிட் மெசேஜ் ஃபார் எவ்ரி ஒன் என்கின்ற அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை தனிப்பட்ட நபர்கள் மட்டுமே டெலிட் ஃபார் எவ்ரி ஒன் என்ற அம்சத்தை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குரூப் அட்மின்களும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். விரைவில் அனைத்து அட்மின்களுக்கும் இது கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.