முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டத் தேர்வு நாளை மறுதினம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் முதல்நிலை படிப்புக்கான க்யூட் தேர்வு செப்டம்பரில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இளநிலை படிப்புக்கான தேர்வு ஜூலை 15, 16, 19, 20, ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.
13 மொழிகளில் நாடு முழுவதும் 554 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் போது தேர்வு மையம் குழப்படி காரணமாக ஏராளமானோர் தேர்வு எழுத முடியாமல் போனது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். செப்டம்பர் 1- 7ம் தேதி வரை மற்றும் செப்டம்பர் 9 -11ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஏற்கனவே CUET தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
Post Views:
0