தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…… 6 மாவட்டங்களில் அலர்ட் அறிவிப்பு…!!! • Seithi Solai


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை இன்று மாலை சாரல் மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.