கேரளாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..!!!


கேரளாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு  அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

The post கேரளாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.