அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஓபிஎஸ் பொறுப்பு அறிவிப்பது பற்றி பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,
உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை சொல்லியிருக்கிறார்கள். ஓபிஎஸ் தரப்பு திரும்பத் திரும்ப இங்கு வரவேண்டும் என்பதல்ல, உயர் நீதிமன்றத்திலே முறையிடுங்கள். இரண்டு – மூன்று வாரங்களுக்குள்ளாக முழு விசாரணை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.பொதுக்குழுவில் எந்தவிதமான விதிமுறைகள் என்று நீதிமன்றம் கேட்டது. ஓபிஎஸ் தரப்பில் ஒட்டுமொத்தமாக பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நீதி அரசர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
ஓபிஎஸ் தரப்பில் 11ஆம் தேதிக்கு முன்பாக இருந்த நிலை தொடர வேண்டும் என்று சொல்லும் போது மாண்புமிகு நீதி அரசர் அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும், செய்திகளிலும் ஊடகங்களிலும் தீர்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.ஆகவே இன்றைய நிலையில் பொதுச் செயலாளராக அண்ணன் எடப்பாடி அவர்கள் தொடர்வார்கள். எனவே எடப்பாடியார் அவர்கள் அறிவிப்புகள் எல்லாம் இன்றைக்கு செயல்பாட்டில் இருக்கிறது. ( ஓபிஎஸ்) அவரை நீக்கியதும் செல்லும், ஏனென்றால் நீக்கியது செல்லாது என்றுதான் அவர்கள் பிரதான கோரிக்கையாக இருந்தது, நீக்கியதை தடை செய்ய வேண்டும் என்பது இருந்தது.
அதை மாண்புமிகு நீதி அரசர்கள் உச்ச நீதிமன்றத்திலே தலைமை நீதிபதி அமர்வு அதை தள்ளுபடி செய்திருக்கின்றார்கள். ஏனென்றால் ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழிகாட்டுதோடு தான் இந்த பொதுக்குழு நடைபெற்றது. இது உள்கட்சியின் உடைய விவகாரம். இதிலே நீங்கள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
நீதிமன்றத்தை ஒரு கருவியாக நீங்கள் பயன்படுத்துவது முறையாக இருக்காது என்பது போன்ற விமர்சனங்கள் எல்லாம் எதிர்தரப்பான ஓபிஎஸ்ஸிடம் சொன்ன பிறகும் அவர்கள் மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது என்பது ஒரு கேள்வியாக கூட மாண்புமிகு நீதியரசர் கேட்டார்கள்.
எத்தனை முறை ? எத்தனை வழக்குகள் ? தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது என்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டது. ஆக தன்னிடத்திலே இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்து காலத்தை அவர்கள் கடத்திக் கொண்டு போகிறார்கள் என தெரிவித்தார்.
Post Views:
0