“நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி செயல்பட்ட 2 பேர்”…. சிறையில் அடைப்பு….!!!!!


நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி செயல்பட்ட இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை பகுதியில் தொடர்ந்து கத்தியை காட்டி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தங்கமணி மற்றும் பிரவீன் உள்ளிட்டோரை குற்ற செயல்களில் இருந்து தடுப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு  ஆஜர்படுத்தினார்.

அப்பொழுது ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் எனவும் கத்தியை காண்பித்து வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை இருவரும் தாக்கல் செய்தார்கள். ஆனால் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை நடுவர் நீதிமன்றம் முன்பு அஜம் படுத்தினார்கள். இதை தொடர்ந்து பிரவீனுக்கு 342 நாட்கள் சிறை தண்டனையும் தங்கமணிக்கு 288 நாட்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.