கெட்டுப்போன வாசனை…. வைரலாகும் சம்பவம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…..!!


உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சாலையில் ஆண்ட்ரூஸ் என்பவர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலமாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். இதை சாப்பிட்ட போது ஆண்ட்ரூஸுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஷவர்மாவை நுகர்ந்து பார்த்த போது அதில் கெட்டுப் போன வாசம் வந்துள்ளது. இது பற்றி ஆண்ட்ரூஸ் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தனது நண்பர்களுடன் அந்த ஷவர்மா கடைக்கு சென்று இது பற்றி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காததால் அவர்களுடன் ஆண்ட்ரூஸ் மற்றும் அவரின் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் தெரியவந்துள்ளது.

பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி ஆய்வு செய்து காலாவதியான மசாலா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து கடை சுகாதாரமற்ற முறையில் இருப்பத்தை அறிந்து தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் இறைச்சி கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்தவர்களிடம் சுகாதாரமற்ற முறையில் உணவு மற்றும் இறைச்சிகளை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.

The post கெட்டுப்போன வாசனை…. வைரலாகும் சம்பவம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.