தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!!


குரங்கம்மை அறிகுறிகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட முன்மாதிரி முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. அதில் அவர்கள்  யாருக்கும் குரங்கமை இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு ஊசியால் கட்டுப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் குரங்கம்மை நோய் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 70-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை ஐந்து பேருக்கு குரங்கமை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் குணமடைந்து இருக்கின்றார். மேலும் கேரளாவில் இரண்டு பேருக்கும் டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா  ஒருவரும்  குரங்கமை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை குரங்கம்மை நோய்க்கான அறிகுறி உள்ளவர்களிடமிருந்து மாதிரிகளை பரிசோதனைக்காக மத்திய அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திருச்சி கன்னியாகுமரியை சேர்ந்தவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்வதில் குரங்கம்மை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் இனிவரும் காலங்களில் சென்னை கிங் மருத்துவமனையில் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.