அண்மையில் வெளியான தேங்க் யூ திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் நாக சைதன்யா பேசியுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் விக்ரம் குமார் இயக்கத்தில் ராஷி கன்னா உடன் இணைந்து நடித்த திரைப்படம் தேங்க் யூ. இத்திரைப்படமானது சென்ற 22-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படம் தேங்க்யூ என கூறியது. இது குறித்து நாக சைதன்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, ஒவ்வொரு படம் மூலமும் நமக்கு சில விஷயம் கிடைக்கின்றது. சில விஷயத்தை இழக்கின்றோம்.
மக்களுக்கு பிடித்த மாதிரி கதையை கொடுக்கத்தான் முயற்சி செய்கின்றோம். சில சமயங்களில் கதை விஷயத்தில் தப்பு கணக்கு போட்டு விடுகின்றோம். பரவாயில்லை. அதில் இருந்து கூட கற்றுக் கொள்கின்றோம். எங்கு கோட்டை விட்டோம் எங்கு சிறப்பாக செய்திருக்கலாம் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றேன். ஒரு நடிகராக அப்படித்தான் நாம் வளர்கின்றோம். வெற்றி நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கின்றது. தோல்விகள் அதைவிட கற்றுக் கொடுக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புடன் தேங்க் யூ படம் வெளியாகி இந்த அளவிற்கு படுதோல்வி அடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
Post Views:
0