ஒரு இளம் பெண்ணிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று வியாபாரி ஒருவர் கூறினார். அதன்பின் ஏன் அவ்வாறு சொன்னோம் என நினைத்து வருந்துவதற்குக் கூட அவர் உயிருடன் இல்லை. நைஜீரியாவில் இருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தவரான Alika Ogorchukwu(39) என்பவர் தெருக்களில் வியாபாரம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அழகான இளம்பெண் ஒருவர் அவ்வழியாக வந்துள்ளார். இந்நிலையில் Alika அப்பெண்ணிடம் ஏதாவது விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்காக ஒரு கைக்குட்டை வாங்கலாமே (அல்லது) 1 யூரோவாவது கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என Alika கூறினார்.
அப்போது அந்த இளம்பெண்ணின் காதலர் காதில் இந்த வார்த்தைகள் விழ, கோபமடைந்த அவர் ஒரு கட்டையை எடுத்து Alikaவைத் தாக்கியிருக்கிறார். அத்துடன் Alikaவைத் தரையில் தள்ளிய அந்நபர் அவர் மீது ஏறி அமர்ந்து பயங்கரமாகத் தாக்கினார். இதனால் Alika அங்கேயே பரிதாபமாக உயிரை விட்டுவிட்டார். உடனே Alikaவின் மொபைலைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து அந்நபர் ஓட்டம் பிடித்துள்ளார். எனினும் அந்த நபரை காவல்துறையினர் பிடித்துவிட்டார்கள். அவரது பெயர் Filippo Claudio Giuseppe Ferlazzo (32) ஆகும். அவர் ஒரு இத்தாலியர் ஆவார். இந்த பயங்கர சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Post Views:
0