தமிழக அரசு பேருந்தில் புது கட்டணம்… வரும் 3 ஆம் தேதி முதல் அமல்…. வெளியான அறிவிப்பு….!!!!


சென்ற வாரம் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவற்றில் தனியார் நிறுவனங்களை போன்று இனி அரசு பேருந்துகளிலும் பார்சல் அனுப்பும் நடைமுறை கொண்டுவர இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி நீண்டதூரங்களிலிருந்து அரசு பஸ்ஸின் வாயிலாக குறிப்பிட்டவாறு பொருட்களை பார்சல் மூலம் அனுப்பி கொள்ளலாம். பிற கட்டணங்களை விட இதில் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. ரூ.200-லிருந்து அதிகபட்சமாக ரூ.400 வரை கிலோ மீட்டர் பொறுத்து வசூல் செய்யப்பட இருக்கிறது.

இதனிடையில் பார்சல் அனுப்ப அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளைமேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளிலுள்ள லக்கேஜ் தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பொதுமக்கள் தங்களது பொருள்கள், கொரியர் போன்றவற்றை தொலைதூரங்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கும், வியாபார நோக்கத்திற்காக குறைவான கட்டணத்தில் அனுப்புவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 3ஆம் தேதி முதல் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

80 கிலோ மீட்டர் வரை தினமும் பார்சல் அனுப்புவதற்கான கட்டண விவரம்

# திருச்சி to சென்னைக்கு பார்சலை அனுப்புவதற்கான கட்டணம் ரூ.210 ஆகும்.

# மதுரை to சென்னை பார்சல் அனுப்ப ரூ. 300 ஆகும்.

# திருநெல்வேலி to சென்னை பார்சல் அனுப்ப ரூ. 390 ஆகும்.

# தூத்துக்குடி to சென்னை பார்சல் அனுப்ப ரூ. 390 ஆகும்.

# செங்கோட்டை to சென்னை பார்சல் அனுப்ப ரூ.390 ஆகும்.

# கோயம்புத்தூர் to சென்னை பார்சல் அனுப்ப ரூ. 330 ஆகும்.

# ஓசூர் to சென்னை பார்சல் அனுப்ப ரூ.210 ஆகும்.

# அதுமட்டுமின்றி இத்தொகையுடன் 18 % ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post தமிழக அரசு பேருந்தில் புது கட்டணம்… வரும் 3 ஆம் தேதி முதல் அமல்…. வெளியான அறிவிப்பு….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.