உக்ரைன் நாட்டின் துறைமுகத்திலிருந்து தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் புறப்படுவதற்கு தயாராகி விட்டதாக துருக்கி அறிவித்திருக்கிறது.
உலகிலேயே உக்ரைன் நாட்டில் தான் அதிக அளவில் தானியங்கள் ஏற்றுமதி நடக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா, கருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் மூலமாக கடல் வழியே தானியங்களை மற்ற நாடுகளுக்கு உக்ரைன் ஏற்றுமதி செய்வதை தடுத்தது.
இதனால், சர்வதேச அளவில் உணவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, ஐ.நா உக்ரைன் நாட்டில் மீண்டும் தானிய ஏற்றுமதியை தொடங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
அதில் கருங்கடல் பகுதியில் இருக்கும் துறைமுகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படாது என்று ரஷ்யா தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதியிலிருந்து உக்ரைன் நாட்டில் தானியங்கள் ஏற்றுமதி தொடங்கப்பட்டது.
நேற்று ஒடேசா துறைமுகத்திலிருந்து துருக்கியின் கப்பலில் தானியங்கள் கொண்டு செல்லப்படுவதை அதிபர் ஜெலன்ஸ்கி பார்வையிட்டார். இந்நிலையில் துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல்கள் தானியங்களுடன் இன்று புறப்பட இருப்பதாக துருக்கி அறிவித்திருக்கிறது.
Post Views:
0