கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசும் எவருடனும் பேச்சுவார்த்தையே இல்லை. துப்பாக்கியை பயன்படுத்துவோரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும். வன்முறையை ஏற்க்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஆயுதக் குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையில் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசு பேச்சுவார்த்தை்தை நடத்தும். மும்பை தாக்குதலுக்கு பிறகு அப்போதைய இந்திய பிரதமர் பாகிஸ்தானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இரு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக கூறி இந்தியா – பாகிஸ்தான் கையெழுத்திட்டது. பாகிஸ்தான் நட்பு நாடா ? அல்லது எதிரி நாடா ? என்பதில் தெளிவே இல்லாமல் ஒரு ஒப்பந்தமா என ஆளுநர் ஆர்.என் ரவி விமர்சனம் செய்தார்.
The post துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி : ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி பேச்சு…!! appeared first on Seithi Solai.