தமிழக மக்களே…. இந்த மாதம் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. உடனே நோட் பண்ணிக்கோங்க…..!!!!


ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதற்கான அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்படும். ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை. அதுபோக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனைத் தவிர பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறையாகும். அதாவது ஆகஸ்ட் 9ம் தேதி முகாரம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 19 கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி, ஆகஸ்ட் 13, 27 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 7, 14, 21, 27 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறையாகும். மேலும் அன்றைய நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழக மக்களே…. இந்த மாதம் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. உடனே நோட் பண்ணிக்கோங்க…..!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.