“காமன்வெல்த் போட்டி”…. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து சொன்ன இந்திய பிரதமர்….!!!!


காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யா ராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் “பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக பிந்த்யா ராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையானது அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும். அத்துடன் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அவரின் எதிர் கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கும் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவரது விடா முயற்சியால் மதிப்பு மிக்க வெள்ளியை வெல்வது காமன் வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். ஆகவே அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர் கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அதன்பின் 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பி. குருராஜாவிற்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விளையாட்டுப் பயணத்தில் இன்னும் பல்வேறு மைல்கல் சாதனையை படைப்பதற்க்கு வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.