பிரதமர் மோடியின் ஆங்கில கவிதை புத்தகம்…. எப்போது வெளியீடு தெரியுமா?….. வெளியான தகவல்….!!!!


இந்திய பிரதமர் மோடி குஜராத் மொழியில் எழுதிய லெட்டர்ஸ் டு செல்ஃப் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்த்தில் உள்ள கவிதைகளை குஜராத் மொழியில் பல ஆண்டுகளாக எழுதி வந்தார். இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டு ஆன்க் தன்யாச்சே என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இதனை திரைப்பட பத்திரிகையாளர் பாவனா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பிரகாஷ் புத்தக நிறுவனம் இந்த ஆங்கில பதிப்பு புத்தகத்தை வெளியிடுகிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கவிதை தொகுப்பில் பிரதமர் மோடி தனது சுதந்திரமான கருத்துக்கள், கனவுகள், இயற்கையின் அழகு முதல் வாழ்வின் அழுத்தம், சோதனை வரையிலான தனது கவலைகளை விவரித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாவனா சோமயா வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி தேடல், துணிச்சல், கருணையின் வடிவம் தான் இந்த கவிதைகள். இந்த புத்தகத்தில் தான் கடக்க விரும்பும் தடைகளை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது உணர்ச்சிகரமான கலக்கம், சக்தி, நம்பிக்கை ஆகியவைதான் அவரின் எழுத்துக்களை வேறுபடுத்தி காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி கடந்த 2020இல் குஜராத் மொழியில் எழுதிய “லெட்டர்ஸ் டு மதர்” என்ற தொகுப்பையும் பாவனா சோமயா தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். ஒரு இளைஞனாக மோடி பெண் தெய்வத்திற்கு கடிதம் எழுதுவது போல் அந்த புத்தகம் அமைந்திருக்கிறது. கவிதைகள் மட்டுமின்றி தேர்வு எழுதும் மாணவர்களின் மனக்கலக்கத்தை போக்க “எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற புத்தகத்தையும் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.