“இதை செய்யுங்கள்” மண்ணின் வளம் பாதுகாக்க வேண்டும்…. தொழில்நுட்ப வல்லுநர் தகவல்….!!


மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் சத்துக்களை கரைத்து பயிருக்கு பயன்படும் விதமாக மாற்றுவதிலும் நுண்ணுயிர்கள் உதவி செய்து வருகிறது. இது தொடர்பான ரசாயன பயன்பாட்டின் காரணமாக மண்ணில் உயிருக்கும் நன்மை செய்யும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறதால் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க உயிர் உரங்களை பயன்படுத்துவது மிகச்சிறந்த வழிமுறையாக இருந்து வருகிறது. அதன்பின் உயிர் உரங்களை மண்ணில் இடுவதன் மூலமாக ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதுடன் கரிமசத்தை அதிகரிக்க முடியும். எனவே எல்லாவிதமான பயிர்களிலும் நம் உயிர் உரங்களை பயன்படுத்தலாம். இவை சிறிய விதைகளாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விதையுடன் 600 கிராமமும் மற்றும் பெரிய விதைகளாக இருந்தால் ஒரு கிலோ உயிர் உரம் தேவைப்படும்.

இதில் தேர்வு செய்யப்பட்ட உயிர் உரங்களை அறிய அரசி கஞ்சியுடன் கலந்து பின் விதைகளை நனைத்து 30 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு விதைத்தல் வேண்டும். இதனை அடுத்து உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்த பின் ரசாயன பொருட்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதில் நாற்றுகளின் வேர்களை நினைத்தல் என்பது பொதுவாக புகையிலை, காய்கறி பயிர்களுக்கான தக்காளி, கத்திரி, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் நெல் பயிர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ உயிர் உரங்களுடன் 10 முதல் 15 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பின் ஒரு ஹெக்டேருக்கு தேவையான தேர்வு செய்யப்பட்டிருக்கும் நாற்றுகளின் வேர்களை 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் நடவிற்க்கு பயன்படுத்த வேண்டும்.

இதனைத் தொடர்ந்து உயிர் உரங்களை மண்ணில் இடுதல் என்பது பொதுவான முறைகளை பின்பற்ற முடியாத தருணத்தில் ஒரு ஹெக்டேருக்கு இரண்டு கிலோ உயிர் உரத்தை 25 கிலோ தொழு உரம் இல்லை என்றால் மணலுடன் கலந்து நடுவதற்கு மூன்று முதல் ஏழு நாட்களுக்கு முன்பு மண்ணில் இடவேண்டும். அதன்பின் திரவ உயிர் உரங்களாக இருந்தால் விதை நேர்த்திக்கு ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் விதையும் 125 மில்லி உயிர் உரங்களை கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் நாற்றுகளின் வேர்களை நனைப்பதற்கு 375 மில்லி உயிர் உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் நேரடியாக மண்ணில் இடுவதற்காக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 500 மில்லி உயிர் உரங்கள் தேவைப்படும். இதை உலர்ந்த குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.