“சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்” மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்த மதுரை குயின் மீரா பள்ளி…. ஆசிரியர்கள் நெகிழ்ச்சி….!!!


சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாநில அளவில் 3-ம் இடத்தைப் பிடித்து 2 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் குயின் மீரா சிபிஎஸ்இ ஸ்கூல் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி மற்றும் திவ்யஸ்ரீ என்ற மாணவிகள் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தையும், 12-ம் வகுப்பு படிக்கும் சிவபாக்கியா என்ற மாணவி 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் 85 சதவீதமாகவும், 12-ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் 82% ஆகவும் இருக்கிறது.

இதன் காரணமாக குயின் மீரா பள்ளி தேசிய தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 3-ம் இடத்திலும், மாவட்ட அளவில் 2-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் மற்றும் தலைவர் சந்திரன் ஆகியோர் எங்கள் பள்ளியானது தரவரிசை மற்றும் மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதில்லை எனவும், எங்களுடைய மாணவர்கள் கல்வி விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் எனவும், ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த முறையில் கல்வி கற்று கொடுக்கின்றனர் எனவும் கூறியுள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.