பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்க ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வசித்தார். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
இதனிடையே பொள்ளாச்சி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை அல்ல எந்திரம் வாங்குவதற்கு சென்ற ஏப்ரல் மாதம் போடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி மற்றும் மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மறு ஒப்பந்தபுள்ளி போடுவதாக மாற்றப்பட்ட தீர்மானத்திற்கு சில திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மேலும் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஆட்சபணை கடிதம் கொடுத்தார்கள். மேலும் 32 வது வார்டு பழுதடைந்த சிறுபாலத்தை சீரமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்ட பொழுது துணைத் தலைவர் கௌதமன், கவுன்சிலர்கள் பெருமாள், செந்தில் உள்ளிட்டோருக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அப்பொழுது கவுன்சிலர்கள் சிலர் ஆதரவாக பேசியதால் அங்கு கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post பொள்ளாச்சி நகராட்சி கூட்டம்…. “திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்”…. பரபரப்பு…!!!!! appeared first on Seithi Solai.