பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கநகை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இவர் இரும்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து மெய்யூரில் இருந்து ஆரணிக்கு பேருந்தில் வந்தார். அதன்பின் ஊரில் உள்ள தனது பேத்தி சினேகாவை பார்ப்பதற்காக சேவூருக்கு பேருந்தில் ஏறினார்.
அதன்பின் சேவூர் பேருந்து நிலையம் அருகில் இறங்கியபோது மாயா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து மாயா ஆரணி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0