ரஜினியின் 169 வது படம்…. இணையும் பிரபல நடிகர்…. வெளியான தகவல்….!!!!!!!!!


ரஜினியின் அண்ணாத்த படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியல் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் தலைவர் 169 பட update வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்ததிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றியுள்ளார். நெல்சன் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம் பற்றி பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையதளத்தில் குவிந்து வந்தது. இதனால் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் கையை விட்டு நழுவுலாம் என தகவல்கள் வெளியாகி இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வதந்தீதிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர்  அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு  உள்ளனர்.

நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் தரமணி, ராக்கி பட ஹீரோ வசந்த் ரவி இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது வசந்த்  ரவி இந்த படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.