கருணை அடிப்படையில் வேலை…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன…..?


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி கொரானா சிகிச்சை பணியில் முன்கள  பணியாளராக ஈடுபட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள  பணியாளர்கள் தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த உத்தரவு மனுதாரரின் கோரிக்கைகளை பரிசீலித்த தமிழக அரசு செவிலியர் தனலட்சுமி மகளுக்கு கருணை அடிப்படையில் பணி கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை எதிர்த்து அருணாச்சலம் தொடர்ந்த வழக்கு நீதிபதி டீ கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் விதமான விதிகள் வகுக்கப்படவில்லை என்பதனால் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணியை பெற தகுதியில்லை என அரசு  தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கொரோனாவில் உயிரிழந்த முன்கள  பணியாளர்களுக்கு இழப்பீடும் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வாங்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அரசிற்கு தலைமை நீதிபதி அமர்வு கடந்த மே பதினோராம் தேதி உத்தரவிட்டிருப்பதாக சுட்டி காட்டி இருக்கின்றார். ஆனால் அதன்படி மாநில அரசு எந்த விதியும் இதுவரை வகுக்கவில்லை என தெரிவித்த நீதிபதி உரிய விதிகளை வகுத்து தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை  ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.