வெறும் 1 மணி நேரத்தில் 1 லட்சம் முன்பதிவு…. பட்டையை கிளப்பும் Scorpio N SUV…!!!!


மஹிந்திராவின் Scorpio N SUV ஒரு மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் முன்பதிவுகளுடன் விற்பனையை தொடங்கியது. ஸ்கார்ப்பியோ லேட்டஸ்ட் வெர்ஷனின் முன்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கியது. முன்பதிவு செய்ய ரூ.21,000 செலுத்த வேண்டும். பண்டிகை காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 26 முதல் டெலிவரி தொடங்கும்.

எஸ்யூவியின் குறைந்த மேனுவல் வேரியண்ட் ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. 25000 கார்கள் முன்பதிவு செய்த பிறகு விலை அதிகரிக்கும். புதிய Scorpio-NZ 4 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் விலை 15.45 லட்சம். மிகவும் விலையுயர்ந்த மாடல் Z8L டீசல் கார் ஆகும். இதன் விலை ரூ.21.45 லட்சம். முதல் 25,000 முன்பதிவுகள் ஒரு நிமிடத்தில் முடிந்ததாகவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு முதல் கட்ட தள்ளுபடி கிடைக்கும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.