சென்னை வந்த பிரதமர் மோடி…. மூத்த நிர்வாகி புகார்…. வெளியான தகவல்….!!!!!!!!!


அதிமுகவில் ஏற்பட்ட அதிரடி திருப்பங்களை தொடர்ந்து 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு கடந்த 28ஆம் தேதி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணத்தின் போது அவரை தனியாக சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் போன்றோர்  திட்டமிட்டு இருகின்றனர். ஆனால் பிரதமர்  இருவரையும் தனியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கவில்லை அதற்கு அவர் தயாராக இல்லை என தகவல் வெளியானது.

ஆனால் அதற்கு பதிலாக சென்னை வரும்போது பிரதமரின் வரவேற்பு நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியும்  பிரதமர் சென்னையிலிருந்து புறப்படும் வழியனுப்பும் நிகழ்வில் ஓ பன்னீர்செல்வமும் பங்கேற்றுள்ளனர். இதற்கு இடையே நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் சந்தித்து பேசி உள்ளனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எஸ். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் போன்றோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளனர். தமிழக அரசியல் சூழல் பற்றி பேச்சு வந்த போது அதிமுகவின் விவகாரம் பற்றி நரேந்திர மோடி கேட்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருக்கிறது. ஆனால் அது நமக்கு எந்த விதத்திலும் பயனில்லை. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பவர்களில் பலர் பாஜகவிற்கு எதிரான எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தில் பாஜக வருவதையும் அண்ணாமலைக்கும் மக்களிடம் செல்வாக்கு பெறுவதையும் அவர்கள் விரும்பாதவர்களாக இருக்கின்றனர் என மூத்த நிர்வாகி ஒருவர் பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றார்கள் எனவும் அதை உணர்ந்து கட்சி பணிகளை தெளிவு படுத்துங்கள் எனவும் அறிவுரை கூறியுள்ளார். அந்த மூத்த நிர்வாகி யார் என்பதை கண்டறியும் பணியில் ரத்தத்தின் ரத்தங்கள் முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.