அமெரிக்க அதிபர் மீது குற்றச்சாட்டு…. விண்வெளி தளவாட மையத்தை சேதப்படுத்திய நபர் கைது….!!


புளோரிடாவை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர். அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீண்ட நாட்களாக திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு காரை திருடியுள்ளார். பின்னர் நேற்று அந்த காரை அதிவேகமாக ஓட்டி கொண்டு வந்து  விண்வெளி தளவாட மையத்தின் வளாகத்தில் மோதி சேதப்படுத்தியுள்ளார். அவரை கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்  தன்னிடம் இச்செயலை செய்ய சொன்னதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். விண்வெளியில் உள்ள வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் மற்றும் சீனா டிராகன்களுக்கிடையில் போர் வர போவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்த செய்தியை விண்வெளி தளவாட மையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்க அதிபர் தனக்கு உத்தரவிட்டதாகவும் அதனால் தான் இச்செயலை செய்ததாகவும் கூறியுள்ளார். அவர் மீது கார் திருட்டு உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் புளோரிடாவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் பேட்ரிக் விண்வெளி தளவாட மையம் அமைந்துள்ளது. அங்கு கிழக்கு பிராந்தியத்துக்கான ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்படும். இப்பகுதியில் ஒருவர் விபத்தை ஏற்படுத்துள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.