மாமியார் கொடுமை….. கணவர் வீட்டில் சடலமாக….. 19 வயது கர்ப்பிணிப் பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!!


19 வயது கர்ப்பிணிப் பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் கணவர் வீட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலத்தூரைச் சேர்ந்த அனந்து என்பவரின் மனைவி பாக்யா (19) என்பவரே உயிரிழந்துள்ளார். இருவரும் காதலித்து, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பாக்யாவின் தாயார், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இலத்தூர் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்யாவை கடத்திய புகாரின் பேரில் ஆனந்து மீது போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டப்பூர்வ திருமண வயதை எட்டியதும், அனந்துவை திருமணம் செய்து கொள்வதன் மூலம் வழக்கை சமரசம் செய்தனர். பாக்யாவை அனந்துவின் தாய் சித்திரவதை செய்து வந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post மாமியார் கொடுமை….. கணவர் வீட்டில் சடலமாக….. 19 வயது கர்ப்பிணிப் பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.