அமெரிக்காவில் பயங்கரம்… துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் சிறுவன் சடலம்… மர்ம மரணம்…!!!


அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் மர்மமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதியரின் வளர்ப்பு மகன் Troy Koehler கடந்த வியாழக்கிழமை அன்று மாயமானதாக காவல்துறையினிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட பின் வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் சிறுவன் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, சிறுவன் தானாகவே துணி வைக்கும் இயந்திரத்தில் ஏறி விளையாடினாரே? அல்லது வேறு ஏதேனும் நடந்ததா? என்பது குறித்து தெரியவில்லை. எனவே, தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

The post அமெரிக்காவில் பயங்கரம்… துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் சிறுவன் சடலம்… மர்ம மரணம்…!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.