நெல்சன் கூட்டணியில் “ஜெயிலர்”…. படப்பிடிப்பு துவங்கும் முன்பே ஏற்பட்ட சிக்கல்…. கவலையில் படக்குழு….!!!!! • Seithi Solai


ஜெயிலர் திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கலால் ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி படப்பிடிப்பு தளத்தில் தான் படப்பிடிப்பில் நடத்தப்படும்.

இதுபோல ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் அங்கு தான் நடைபெற இருக்கின்றது. ஆனால் தற்பொழுது தெலுங்கு திரையுரையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆகஸ்ட் 1 முதல் படபிடிப்பு நடந்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. எப்பொழுது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுமோ அப்பொழுதுதான் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்படும். முன்னதாக ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது தடை காரணமாக படபிடிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் படபிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியாமல் ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.