திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பெரம்பலூர், சின்னாறு அருகே நடந்த இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருசிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Post Views:
0