சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கம்பேட்டை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் செல்வதற்கு மணலால் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரிந்த லாரியை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0