செஸ் ஒலிம்பியாட் போட்டி….. இந்திய வீரர்களுக்கு வெற்றிமேல் வெற்றி…. மகிழ்ச்சி செய்தி….!!!!


சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட் பிரம்மாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணி அளவில் தொடங்கியது. இதில் மூன்று வெவ்வேறு அணிகள் பங்கேற்றன. செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்திய பி அணிக்கு விளையாடிய  ரோனக் சத்வானி வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ரோனக் சத்துவானின் 36 நகரத்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை  வீழ்த்தினார். இவரின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய பி மகளிர் அணி வேர்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இந்திய சி பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.  ஹாங்காங் அணி வீராங்கனையை 49 வது நகரில் ஈஷா கர்வாடே வென்ற நிலையில் பிரதிஷாவும் வெற்றி பெற்றார். மேலும் ஓபன் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தமிழக இளம கிராண்ட் மாஸ்டர் குகேஷூம் வெற்றி பெற்று அசத்தினார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.