ரயில்களில் உணவுக்கு ஜிஎஸ்டி…. ஆனால் இதுக்கு ஜிஎஸ்டி கிடையாது…. அதிரடி தீர்ப்பு….!!!!


ரயில்களிலும், பிளாட்பார்மகளிலும் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்வதற்கான சேவைக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று உயர்நிலை தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வு அறிவித்துள்ளது. இருப்பினும் பேப்பர்(செய்தித்தாள்) விநியோகத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து விளக்கம் கேட்டு டெல்லி உயர்நிலை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது.

அப்போது ரயில்கள் மற்றும் பிளாட்பார்மல்களில் உணவு மற்றும் பானங்கள் வினியோகம் செய்வதற்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் எனவும் செய்தித்தாள்கள் வினியோகத்திற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில்களில் உணவுக்கு ஜிஎஸ்டி…. ஆனால் இதுக்கு ஜிஎஸ்டி கிடையாது…. அதிரடி தீர்ப்பு….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.