பொதுக்குழு விவகாரம்…. “மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை”….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!


அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக் குழு கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் அளித்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தை தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொது குழுவை நடத்தலாம். உட்கட்சி விவாகரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு  வந்தது. அப்போது 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் என்ன நடந்தது குறித்து இன்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். சட்ட விதிகளுக்கு எதிராக நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை, நிகழ்ச்சி நிரல்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியது. இதுவரை எத்தனை வழக்குகள் தொடர்ந்துள்ளீர்கள் சமரசமாக செல்ல வாய்ப்பு உள்ளதா என ஓ.பன்னீர்செல்வம்  தரப்பிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதனைப் போல சமரசமாக செல்கிறீர்களா என எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமும் தலைமை நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு சமரசமாக போக வாய்ப்பில்லை என்று இரு தரப்பினரும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு முடிவுக்கு உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஓபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை மூன்று வாரத்தில் முடித்து வைக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.