கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் கீழ்கொள்ளிடம் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அதில் சரவணன்(50) என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகள் ஒருங்கிணைந்து “வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” என்ற பெயரில் விளைபொருட்களை வாங்கி வணிகம் செய்து வருகிறோம். அதன்படி சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 10, 350 கிலோ உளுந்து வாங்கினோம். அதனை மணிவண்ணன் என்பவர் மூலமாக ஈரோடு மாவட்ட பெருந்துறையில் வியாபாரம் செய்து வந்த இப்ராஹிம் மனைவி நிலாபர்(38) என்பவருக்கு கடந்த மே 2 ஆம் தேதியன்று ரூ.7,24,500 உளுந்து அனுப்பி வைத்தோம். ஆனால் உளுந்தை வாங்கிக் கொண்ட நிலாபர் அதற்கான பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசருக்கு உத்தரவிட்டனர்.அதன் பேரில் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் பெருந்துறை சென்று, அங்கு நிலாபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நிலாபர் கூறியது, தான் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும், அதில் போதுமான வருமானம் கிடைக்காதால் விவசாய பொருட்களை கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்து வந்ததேன். அந்த சமயத்தில் சேலத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கருப்பு உளுந்து விற்பனை உள்ளதாக விளம்பரம் செய்ததை பார்த்து அவரிடம் 10,350 கிலோ வாங்கிக் கொண்டு அதே மொத்தமாக வேறு ஒருவரிடம் விற்று அதன் மூலம் பெற்ற பணத்தை தான் ஜாலியாக சுற்றுலா தலங்களுக்கு சென்று செலவழித்து விட்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நிலாபரை கைது செய்து கடலூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
Post Views:
0