அடேங்கப்பா…. லாக்டவுனில் விமானத்தை உருக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்….. ஐரோப்பியாவில் டூர்….!!!


உலக நாடு முழுவதும் கடந்த இரண்டு கொரோனா பரவல் பரவியது. இதனால் உலக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது வீட்டிற்குள்ளே முடங்கிய பலர் யூடியூப் பார்த்து புதுப்புது உணவுகளை தயாரித்து ருசித்து மகிழ்ந்து வந்தனர். ஆனால் லண்டனில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் என்பவர் அதை யூடியூப் உதவியுடன் குடும்பத்திற்காக பிரத்தியோகமாக விமானம் ஒன்றே தயாரித்துள்ளார். கேரள மாநில ஆலப்புழாவை பூர்வீகமாக கொண்ட அவர் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் ஆலைகள் முடங்கியதால் கிடைத்த கால அவகாசத்தில் வீட்டிலிருந்தபடியே விமான தயாரிப்பு கையடுகள், யூடியூப் வீடியோக்கள் ஆகியவற்றின் மூலம் சிறிய ரக விமானத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட தயாரிப்பு சோதனைகளுக்குப் பிறகு முறையான அனுமதி கிடைத்ததும் தாமே தயாரித்த சிறியதாக விமானத்தில் மனைவி, இரண்டு மகளுடன் ஐரோப்பாவை வலம் வர தொடங்கி விட்டார். இதுவரை ஜெர்மனி, ஆஸ்திரிய, செக்குடியரசு ஆகிய நாடுகளை அவர் வளம் வந்துவிட்டார். ஒன்றை ஆண்டு கால உழைப்பை கொட்டி ரூ.1.8 கோடி செலவில் குடும்பத்திற்காக தனி விமானத்தை அசோக்கு உருவாக்கி உள்ளார். இதனையடுத்து தனிப்பட்ட பயணத்திற்கு என்று ஏற்கனவே சிறிதாக விமானங்கள் இருக்கு ஏன் இந்த முயற்சி என்று கேட்டபோது, அவை பெரும்பாலும் இரண்டு இருக்கைகள் கொண்டவை என்பதால் மனைவி இரு மகளுடன் ஒன்றாக பயணிப்பதற்காகவே நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தை வடிவமைத்ததாக அவர் கூறினார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.