முகமூடி கொள்ளையர்கள் தொடர் கைவரிசை…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. சேலத்தில் பரபரப்பு….!!!


தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே காவன்காடு பகுதியில் ஜெய்கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் சில மர்ம நபர்கள் நுழைந்து பீரோவை உடைத்து ரூ. 1,25,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் கைவரிசையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்த 2 பேர் மேல் சட்டை இல்லாமல் நடமாடியது தெரியவந்தது. இந்த புகைப்படங்களை வைத்து போலீசார் திருடர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.