நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும்….. இனி இது கட்டாயம்….. அதிரடி உத்தரவு….!!!!


நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘சிசிடிவி கேமரா’ கட்டாயம் பொருத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து எம்என்சி தலைவர் டாக்டர் சுரேஷ் சந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது முக்கியமானதாக உள்ளது.

அதன்படி, வளாக முகப்பில் 1, நோயாளிகள் பதிவு இடத்தில் 2 மற்றும் புறநோயாளிகள் பிரிவில் 5 என கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர விரிவுரை கூடங்கள், ஆய்வகங்கள், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் கேமராக்களை பொருத்த ஆணையிடப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.