பாம்பு கடித்து இறந்த சிறுமி…. போக்சோ சட்டத்தில் 6 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளை அமைந்துள்ளது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த 10 வயது சிறுமி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சிறுமி இறப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பாலு(65) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

மேலும் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், விஜயகுமார், ரமேஷ், கண்ணன், பாஸ்கர் ஆகியோருடன் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பாம்பு கடித்து இறந்த சிறுமி…. போக்சோ சட்டத்தில் 6 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்…!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.