44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயின்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றது.
187 நாடுகளில் சேர்ந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும் கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி போன்றோர் கலந்து கொண்டனர்.
Post Views:
0