அமெரிக்காவில் பெடல் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது ரெப்போ வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயரும் என அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கை கூட்டம் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கொள்கை கூட்டத்தின் போது ரிசர்வ் வங்கி 0.90 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இதேபோன்று ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் கொள்கை கூட்டத்திலும் 4.90 % வரை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தொடரின் போது ரெப்போ வெட்டி விகிதம் 0.35% வரை உயரம் என அமெரிக்காவின் போஃபோ செக்யூரிட்டி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி சில அதிரடி முடிவுகளை எடுக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் கலந்த சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் இந்தியாவிலும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
Post Views:
0