கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு…..  கைதானவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு….!!!


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்தனா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐந்து பேரையும் சிபிசிஐடி போலீஸ் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.  இந்நிலையில் இவர்கள் 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவர்களது வக்கீல் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வரும்பொழுது ஜாமீன் கிடைக்குமா ? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

The post கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு…..  கைதானவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு….!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.