நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர “நீட்” எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நீட்தேர்வு நாடு முழுதும் சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் இந்த தேர்வு எழுதினர். இதனிடையில் தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் போக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. நாடு முழுதும் நடைபெற்ற இந்த தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17,78,725 நபர்கள் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை அதிகாரப்பூர்வாக வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தேச விடைகளை neet.nta.nic.in எனும் இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. உத்தேச விடைகள் குறித்து எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரியப்படுத்த தேர்வருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.