ஆட்டோ டிரைவர்களே!…… “இனி இந்த தவறு செய்தால்” கடும் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!


தூத்துக்குடியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்று செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிப்பு நடைபெறுகிறது ஈடுபடவில்லை என்று புகார்கள் எழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆட்டோவில் ஏற்றி செல்வது குறித்து கண்காணிப்பதற்கான 4 குழுக்களாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 21 ஆட்டோகளில் குழந்தைகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டோக்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நேரடியாக அங்கு சென்று ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ஆட்டோக்களில் ஐந்து மாணவர்களை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். ஆனால் பல ஆட்டோகளில் மாணவர்கள் வெளியில் கால்களை தொங்கப்போட்டு கொண்டு செல்வதாகவும், ஆட்டோவின் வெளிப்பகுதியில் புத்தகப் பைகள் தொங்க விடுவதாகவும் புகார்கள் எழுந்து உள்ளது. எனவே அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்று செல்லக்கூடாது. இனிமேல் அதிக அளவில் குழந்தைகளை ஏற்று சென்றால் ஆட்டோ டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனைப் போல பெற்றோர் ஒரே ஆட்டோவில் அதிக அளவில் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இது குறித்து வரும் காலங்களில் தொடர்ந்து ஆட்டோக்கள் கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிடிக்கப்பட்ட 21 ஆட்டோக்களும் விடுவிக்கப்பட்டது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.