அடிதூள்…. சென்னையில் டிரைவர் இல்லா முதல் மெட்ரோ ரயில்…. 26 மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டம்….!!!!!


சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 26 மெட்ரோ ரயில்களை டிரைவர் இல்லாமல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில்மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழித்தடங்களில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த வழித்தடங்களில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்காக அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.946 கோடியே 92 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான மொத்த நிதியையும் தமிழக அரசு வழங்குகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் ட்ரைவர் இல்லா மெட்ரோ ரயில் 2024 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளன.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.