“என் மனசு தாங்காது” கேப்டனை பார்த்தால் செத்துவிடுவேன்….. பிரபல நடிகர் உருக்கம்….!!!!!


தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர் பொன்னம்பலம். கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகர் பொன்னம்பலம் வலது காலில் இரு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு வீட்டில் ஓய்வெடுக்கும் கேப்டன் விஜயகாந்தை, இன்னும் நான் பார்க்கவில்லை. அவரை பார்த்தால் செத்துவிடுவேன் என்று  உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், அவரின் தற்போதைய தோற்றத்தை பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல அளவு கடந்த பாசம் வைத்துவிட்டு, அவருக்கு உடல்நிலை மோசமாக இருக்கும் போது நம்மால் அவரை பார்க்க முடியாது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.