ஆகஸ்ட் 1 விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!!!


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்காண திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது.

ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13ம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post ஆகஸ்ட் 1 விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.