நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு முன் கூட்டியே வெளியான போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்த வருகின்றார். மேலும் ஹாலிவுட்டிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார். ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சென்ற 22ஆம் தேதி வெளியான தி கிரே மேன் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று.
அவரின் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் முன்கூட்டியே நேற்று தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டார். இந்த போஸ்டரில் நடிகர் தனுஷ் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் கையில் வில்லம்பு, மாடர்ன் டிரஸ் என இருக்கின்றார். இதை நேற்று வெளியிட்ட தாணு, நாளை பிறந்தநாள் காணும் தனுஷ் மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.
Post Views:
0