சென்னையில் இன்று(28.8.22) போக்குவரத்து மாற்றம்….. வாகன ஓட்டிகளே இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!!


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில்இன்று  நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர், முதலமைச்சர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக விரிவான சாலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புளியந்தோப்பு டிமல்ஸ் சாலை, ஜெர்மயா சாலை, ஈ.கே.வே சம்பத் சாலை, ஆகியவற்றிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. காந்தி இர்வின் சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்லவும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.