“இது தான் தமிழ்நாடு”, “இது தான் சென்னை” செஸ் மீது பைத்தியம்…. வியந்து போன ஸ்பெயின் வீரர்….!!!!


சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கி ஒத்திகை போட்டியும் நடந்தது.

இதனைத்தொடர்ந்து 40 நாட்களுக்கு பிறகு செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் வந்தடைந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஒலிம்பியாட் ஜோதியை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் தமிழக போலீஸார் செஸ் விளையாடுவதை பார்த்து ஸ்பெயின் செஸ் வீரர் மைக்கேல் ரஹால் வியப்பில் மூழ்கியுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்த அவர் உள்ளூர் காவல்துறையினர் கூட செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் செஸ் விளையாடுகின்றனர். சென்னை மக்கள் செஸ் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ‘இது தான் தமிழ்நாடு’, ‘இது தான் சென்னை’ என்று பலர் பதிலளித்து வருகின்றனர்.

The post “இது தான் தமிழ்நாடு”, “இது தான் சென்னை” செஸ் மீது பைத்தியம்…. வியந்து போன ஸ்பெயின் வீரர்….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.